தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் பெண்களை வழிமறித்து நகைகளை பறிக்கும் தொடர் சம்பவம்: இருவர் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று இளம்பெண்களிடம் நகைகள் மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை

News image
Updated On :13 நவம்பர் 2013, 2:02 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் பகுதியில் மோட்டார் சைக்களில் சென்று பெண்களை வழிமறித்து நகைகளை பறிக்கும் இருவரை கடலூர் மாவட்ட தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று இளம்பெண்களிடம் நகைகள் மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா வழிபறி கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தார்.

இந்நிலையில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு சிதம்பரம் பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த கெளதமன் (24), மஞ்சக்குழியைச் சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய இருவரை பரங்கிப்பேட்டை அருகே புதன்கிழமை கைது செய்தனர். விசாரணையில் சிதம்பரம் முத்தையாநகரைச் சேர்ந்த வளர்மதி என்பவரை வழிமறித்து 4 பவுன் செயினை பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. அதேபோன்று சிதம்பரம் புறவழிச்சாலையில் நர்சிங் மாணவி ஒருவரிடமும், நகரில் பள்ளி மாணவி ஒருவரிடம் செயினை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.