நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதையொட்டி, நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.


வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதையொட்டி, நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
சென்னையிலிருந்து கிழக்கே, தென்கிழக்கு திசையில் 700 கி.மீ தொலைவிலும், நாகையிலிருந்து கிழக்கே, வடகிழக்கு திசையில் 730 கி.மீ தொலைவிலும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. புயல் உருவாகக்கூடிய, திடீர்க் காற்றுடன் கூடிய மழையுள்ள வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தூர முன்னறிவிப்பாக இந்தக் கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, நவ. 15-ம் தேதி இரவு அல்லது நவ. 16-ம் தேதி காலை நாகை- சென்னையிடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதன்கிழமை நாகை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வானிலை மாற்றம் ஏதுமில்லை. பகல் நேரங்களில் வெயில் வானிலையே நீடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...