12 ஆண்டுகளாக வேலைகிடைக்காமல் காத்திருக்கும் மின்வாரிய தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள்
12 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்வாரிய தொழில் பழகுநர் (TNEB APPRENTICE) பயிற்சி முடித்தவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


12 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்வாரிய தொழில் பழகுநர் (TNEB APPRENTICE) பயிற்சி முடித்தவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஐ.டி.ஐ படித்து முடித்து விட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்வாரிய தொழில் பழகுநர் பயிற்சி முடித்தும் சுமார் 1407 பேர் கடந்த 12 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். தற்போது தமிழக முதல்வர் மின்வாரியத்தில் 4 ஆயிரம் கள உதவி பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 11-11-13 முதல் 16-11-13 வரை 15 மாவட்டங்களில் நேர்காணம் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலுக்கு மின்வாரியத்தில் மின்வாரிய தொழில் பழகுநர் பயிற்சி முடித்த எங்களையும் அழைத்து பணி நியமனம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வயது வரம்ப அதிகமாகிவிட்டதால் பணி கிடைத்தால் வாரியத்தில் சுமார் 15 ஆண்டுகள் மட்டும்தான் பணி கிடைக்கும் என்ற நிலை உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் பணியாற்றிட தமிழக முதல்வர் கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் என முதல்வருக்கு மின்வாரிய தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...