மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாலை மறியல், கல்வீச்சில் ஈடுபட்டதாக 101 பேர் மீது வழக்கு, 19 பேர் கைது 

ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான ரோலார் ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டியில் மகளிர் பிரிவில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது.இப்போட்டிகள் ஈரோடு அருகே கூரப்பாளையத்தில்

Updated On :15 நவம்பர் 2013, 3:04 pm

தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல், கல்வீச்சில் ஈடுபட்டதாக ஆவட்டி மற்றும் கல்லூர் கிராமங்களை சேர்ந்த 101 பேர் மீது போலீஸôர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி குறுக்குச் சாலையில், வியாழக்கிழமை மாலை ஆட்டோ மீது கார் ஒன்று மோதிய விபத்தில் 6 குழந்தைகளும் 2 ஆசிரியைகளும் காயமடைந்தனர். இந்த விபத்தையடுத்து ஆத்திரமடைந்த ஆவட்டி மற்றும் கல்லூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருத்தசாலம் கோட்டாட்சியர் உதயகுமார், திட்டக்குடி டிஎஸ்பி கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தியும், மேம்பாலம் கட்டிக்கொடுக்க எழுத்துபூர்வ உறுதிமொழி அளித்தால் மட்டுமே கலைந்து செல்ல முடியும் என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் காரும் மறியல் போராட்டத்தில் சிக்கிக்கொண்டது. சரத்குமாரும் இறங்கிவந்து மக்களை சமாதானம் செய்ய முற்பட்டார். ஆனால் பொதுமக்கள் கலையவில்லை.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் , சரத்குமார் காரை, அங்கிருந்து செல்ல கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதையடுத்து அங்கிருந்து புறப்பட முயன்ற சரத்குமார் காரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர்.போலீஸார் எச்சரிக்கை விடுத்தும் கூட்டம் கலையவில்லை. இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். நாலாப் பக்கமும் சிதறி ஓடியவர்கள் போலீஸாரை நோக்கி சரமாரியாக கற்களை வீசினர். இந்தக் கல்வீச்சில் போலீஸôரின் வாகனங்கள் சேதமடைந்தன.  சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரது தலையில் காயம்பட்டது.

 இதுதொடர்பாக ராமநத்தம் போலீஸôர் ஆவட்டி மற்றும் கல்லூர் கிராமங்களை சேர்ந்த 101 பேர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். இதில் சரவணகுமார், வாசுதேவன், அப்துல்காதர், வையாபுரி, வேல்முருகன், பெரியசாமி உள்ளிட்ட 19 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.