மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூரில் நகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ. 1 கோடி மதிப்புள்ள  நகைகள் கொள்ளை

கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் சாந்திலால்(60). இவர் கடலூர் லாரன்ஸ் சாலையில் நகை கடை நடத்தி வருகிறார்.  வெள்ளிக்கிழமை இரவு சாந்திலால் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார்

Updated On :16 நவம்பர் 2013, 12:10 pm

கடலூரில் நகை கடையில் கதவை உடைத்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் சாந்திலால்(60). இவர் கடலூர் லாரன்ஸ் சாலையில் நகை கடை நடத்தி வருகிறார்.  வெள்ளிக்கிழமை இரவு சாந்திலால் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். சனிக்கிழமை காலை வழக்கம்போல் சாந்திலால் நகை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் 4 இரும்பு ஷட்டர்களும் கேஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு நகை கடை திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையின் வைத்திருந்த 3  கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1 கோடி.

இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸில் சாந்திலால் புகார் அளித்தார்.  போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து தடயங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள கடலூர் லாரன்ஸ் சாலையில் கேஸ்  வெல்டிங் இயந்திரத்தை கொண்டு வந்து கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி வியாபாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.