ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது

கடலூர்- நாகப்பட்டனம் இடையே  நாகை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. நாகை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அவ்வப்போது சூறாவளிக் காற்று வீசியது.

News image
Updated On :16 நவம்பர் 2013, 11:14 am

சங்கர்

கடலூர்- நாகப்பட்டனம் இடையே  நாகை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. நாகை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அவ்வப்போது சூறாவளிக் காற்று வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு எதுவும் இல்லை.பிற்பகல் 3 மணிக்கு பிறகு வானம் தெளிவாக காணப்பட்டது.

முன்னதாக வங்க கடலில் தாழ்வு நிலை காரணமாக  நாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வெள்ளிகிழமை இரவு முதல் நாகையின் அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.மாவட்டத்தில் அதிக அளவாக மயிலாடுதுறை வருவாய் கோட்ட பகுதிகளில் சனிகிழமை பகல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.