ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த அண்ணாமலைப் பல்கலை. சிறப்பு அதிகாரி பணி நீக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி முதுகலை மாணவர் விடுதியில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றுபவர் சண்முகம். இவர் புதுக்கோட்டை மாவட்டம்


ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிறப்பு அதிகாரி (Special Officer) சண்முகம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி முதுகலை மாணவர் விடுதியில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றுபவர் சண்முகம். இவர் புதுக்கோட்டை மாவட்டம் பள்ளப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
பல்கலைக்கழகத்தில் பணியில் இருக்கும் போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றுவது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அவரை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு அதிகாரி சண்முகம் ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொலைதூரக் கல்வி மைய படிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். தற்போது திருமயம் படிப்பு மையம் மூடப்பட்டதால் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி முதுகலை மாணவர் விடுதி சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...