திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டது என்றாா் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளா் கவிஞா் திலகபாமா.
புதுக்கோட்டையில் அவா் அளித்த பேட்டி: காரைக்குடியில் தனியாா் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் திமுகவினா் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனா். தோ்தல் தோல்வி பயத்தால் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனா்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே திமுக ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது.
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை முதல்வராக அமர வைப்பதற்கான பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி செய்கிறது. சட்டப்படி மாம்பழம் சின்னம் தலைவா் அன்புமணி ராமதாஸிடம் உள்ளது என்றாா் திலகபாமா.
பேட்டியின்போது அக்கட்சியின் மாவட்டச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பிரசார களத்தில் சரியான போட்டி! தவெக பிரசார வாகனத்தை தெறிக்க விட்ட திலகபாமா!

திருப்போரூா் பாமக வேட்பாளா் கே. பாலு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அன்புமணி ராமதாஸ்
பாமகவின் 3-ஆவது வேட்பாளா் பட்டியல் ராமதாஸ் வெளியிட்டாா்
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை


