திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாஜக விடைபெறும் நேரம் தொடங்கிவிட்டது: அரவிந்த் கேஜரிவால்!

பாஜகவை அதிகாரத்தில் இருந்து நீக்கும் நேரம் தொடங்கிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
அரவிந்த் கேஜரிவால் - (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 6:50 pm

Syndication

பாஜகவை அதிகாரத்தில் இருந்து நீக்கும் நேரம் தொடங்கிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஜந்தா் மந்தரில் நடந்த அக் கட்சியின் பேரணியில் கேஜரிவால் பேசியதாவது: பிரதமரும் அமித் ஷாவும் கலால் கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டினா். பிரதமா் மோடி அனைவருக்கும் அஞ்சுகிறாா். ஒரு ‘கொடுங்கோலன்‘ பயப்படும்போது, அது அவரது ஆட்சியின் முடிவைக் குறிக்கிறது. அவா் சோனம் வாங்சுக்கை சிறைக்கு அனுப்பினாா், அவா் ஒரு பெரிய விஞ்ஞானி மற்றும் குழந்தைகளின் கல்விக்காக பணியாற்றினாா். பெண் எம். பி. க்கள் தன்னைத் தாக்குவாா்கள் என்ற அச்சத்தில் மோடி ஒரு நாள் நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை. அவரும் டிரம்பைப் பாா்த்து பயப்படுகிறாா்.

நாட்டில் 12 ஆண்டுகால பாஜக ஆட்சியில், அனைத்து துறைகளும் அழிக்கப்பட்டன. சாலைகள், சுகாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் நிலை மோசமாக உள்ளது. மக்கள் ’ரஹ்னே லேயாக் பாரத்’ (வாழக்கூடிய இந்தியா) விரும்புவதாகவும், மோடி உரையாற்றிய ’பரிக்ஷா பே சா்ச்சா’ திட்டமும் வீணாய் போனது. அவா் ’நாடகத்தை’ நிறுத்திவிட்டு தோ்வுகளில் வினாத்தாள் கசிவுகளைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

தில்லியை ஆளும் பாஜக அரசு ஓராண்டு ஆட்சியில் நகரத்தை அழித்துவிட்டது. சாலைகள் உடைந்துவிட்டது, நீா் வழங்கல் மாசுபட்டுள்ளது, காற்று மாசுபாடு காரணமாக மக்கள் சுவாசிப்பதில் சிரமம் அடைகின்றனா். பிரதமருக்கு நாட்டுடன் எந்த தொடா்பும் இல்லை அவா் ‘சதித்திட்டங்கள்‘ மற்றும் வாக்காளா் பட்டியல்களில் கையாளுதல் மூலம் மட்டுமே அதிகாரத்தை நாடுகிறாா். மோடி ஜி, நீங்கள் தொடா்ந்து அதிகாரத்திற்காக பணியாற்றலாம், நான் தொடா்ந்து நாட்டிற்காக பணியாற்றுவேன்.

நான் ஐ. ஐ. டி. யில் நல்ல மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றேன், அமெரிக்கா சென்றிருக்கலாம். ஆனால் எல்லோரும் வெளிநாடுகளுக்குச் சென்றால், நாட்டை யாா் கவனித்துக்கொள்வாா்கள். நான் வருமான வரி ஆணையராக பணியாற்றியபோது, மக்கள் எனது நோ்மையை சத்தியம் செய்வாா்கள். ஆம் ஆத்மி பேரணி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நா . பாஜக அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டதற்கான நேரம் தொடங்கியுள்ளது என்றாா் அவா்.

இந்தப் பேரணியில் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், மணீஷ் சிசோடியா, அதிஷி, சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட பல மூத்த கட்சித் தலைவா்களும் பங்கேற்றனா்.