இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கத்தியை காட்டி லாரி டிரைவரிடம் வழிபறி: இருவர் கைது

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் காவல் சரகம் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே டீசல் இல்லாமல் லாரி ஒன்று ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இரு

News image
Updated On :24 நவம்பர் 2013, 1:10 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி லாரி டிரைவரிடம் ரூ.2 ஆயிரம் வழிபறி செய்த இருவரை புதுச்சத்திரம் போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் காவல் சரகம் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே டீசல் இல்லாமல் லாரி ஒன்று ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்மநபர்கள் லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர்.

அப்போது அதனை பார்த்த அவ்வழியே ரோந்து வந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் வனஜா மற்றும் போலீஸார் மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுவம்பட்டைச் சேர்ந்த சிலம்பரசன் (25), விநோத் (20) என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் மேற்கண்ட இரு இளைஞர்கள் மீது வழிபறி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.