இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீவிபத்து: ஆவணங்கள் அறை எரிந்து சேதம்

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணங்கள் அறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமுற்றன. சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணங்கள் அறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவே உள்ளுக்குள் திடீரென தீப்பிடித்துள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2013, 1:50 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணங்கள் அறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமுற்றன. சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணங்கள் அறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவே உள்ளுக்குள் திடீரென தீப்பிடித்துள்ளது.

அறையிலிருந்து ஆவணங்கள் எரிந்து மேல்கூரையில் தீப்பிடித்து புதன்கிழமை அதிகாலை வெளியில் தெரிந்தது கண்டு அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் இரு வாகனங்களில் சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் அறையிலிருந்த  ஆதிதிராவிட நல வட்டடாட்சியர் அலுவலக ஆவணங்கள், நிலஎடுப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோப்புகள், ஆதிதிராவிடநலத்துறை பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஆவணங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை எரிந்து சேதமுற்றன. தீவிபத்து குறித்து சிதம்பரம் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.