டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு முறையாகச் செலவிடவில்லை: கருணாநிதி

மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதியை, தமிழக அரசு முறையாகச் செலவிடவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:59 pm

அரவிந்தன்

மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதியை, தமிழக அரசு முறையாகச் செலவிடவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு புறக்கணிப்பதாக அதிமுக அரசு குறை கூறி வருகிறது.இப்படிக் குறை நேரத்தில் கூறும் நேரத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்காக ஒதுக்கும் நிதியையாவது முறையாகச் செலவிட முன் வரவேண்டாமா நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் சென்னை மண்டல தலைமைப் பொது மேலாளர் ஐ.ஜி.ரெட்டி, தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடங்கி உள்ளன என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.இதே குற்றச்சாட்டினை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடர்பாக நானே (கருணாநிதி) பல முறை குறிப்பிட்டுள்ளேன்.ரூ.1885 கோடி மதிப்பிலான துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை ரூ.900 கோடி வரை செலவு செய்த பிறகு, ஓராண்டாகக் கிடப்பில் போட்டுள்ளனர்.இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் ரூ.900 கோடி வரை இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளது.அந்த இழப்பீட்டுத் தொகையை யார் கணக்கில் சேர்ப்பது முதல்வர் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றால், மக்கள் வரிப்பணி அல்லவா வீணாகிறது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை.மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரும், அந்தத் துறையின் உயர் அதிகாரியும் வெளிப்படையாக தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.அதற்கு முதல்வரோ, அந்த துறையின் அமைச்சரோ பொறுப்புணர்வோடு பதில் சொல்லியிருக்க வேண்டாமா

யாரும் பதில் அளிக்காததில் இருந்து அது உண்மை என்றாகி விடுகிறது.மாநில அரசுக்குத் தேவையான நிதியைக் கேட்பது உரிமை. ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகச் செலவழிக்க வேண்டியது கடமை. உரிமையைக் கேட்கும் நேரத்தில் கடமையை மறந்துவிடலாமா என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.