கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: ஈரோடு நகர வருவாய் ஆய்வாளர் கைது

ஈரோடு நகர வருவாய் ஆய்வாளர் மனோகரனிடம் கந்தசாமி என்பவரின் மகன் தனது ஒன்றுவிட்ட சகோதரர்களின் வாரிசுச் சான்றிதழ் விஷயமாக அணுகினார்.

News image
Updated On :28 நவம்பர் 2013, 7:31 am

ஜபலின் ஜான்

ஈரோட்டில் வாரிசுச் சான்றிதழுக்கு லஞ்சம் பெற்ற நகர வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு நகர வருவாய் ஆய்வாளர் மனோகரனிடம் கந்தசாமி என்பவரின் மகன் தனது ஒன்றுவிட்ட சகோதரர்களின் வாரிசுச் சான்றிதழ் விஷயமாக அணுகினார்.

ஈரோடு கருங்கல்பாளையம் கந்தசாமியின் அண்ணன் சுப்ரமணி கடந்த 2011ல் இறந்துவிட்டார். அவரது மகன்கள் 3 பேர் கட்டடத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு வாரிசுச் சான்றிதழ் விவரத்தில் எவ்வாறு அணுகுவது என்பது தெரியாததால், கந்தசாமியின் மகன் மூலம் வருவாய் ஆய்வாளரை அணுகினர். வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1000 வேண்டும் என்றாராம் மனோகரன். அவர்கள் முதலில் ரூ.300ஐக் கொடுத்துள்ளனர். அதை அவர் வீசி எறிந்துள்ளார். இதனால் வருத்தம் அடைந்த கந்தசாமியின் மகன், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் இன்று காலை ரூ.1000 கொடுக்கும்போது, மனோகரனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.