தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கால்வாயில் விழுந்த 5 வயது சிறுவன் சாவு

சங்கராபுரம் அடுத்துள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சிவா(5). இதேப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு

News image
Updated On :30 நவம்பர் 2013, 1:49 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

 விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே கால்வாயில் விழுந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தான்.

 சங்கராபுரம் அடுத்துள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சிவா(5). இதேப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தான்.

 வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று மாலை வீட்டுக்கு வந்த சிறுவன், தெருவில் நின்ற மாடு ஒன்று சீறியதால் பயந்த கால்வாயில் விழுந்தான்.

 இதனால் காயமடைந்த சிறுவன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தான்.

 இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.