இதைத் தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் நாகைக்கு அழைத்துச் சென்ற சத்தியமூர்த்தி, நாகை மாவட்டம், திருக்குவளை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பொ. சிந்துஜா(25) என்பவரை, நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் சந்திக்கச் செய்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிந்துஜா பணியாற்றுவதாக அறிமுகப்படுத்தியுள்ளார்.அப்போது, சிந்துஜா 2 பேருக்கும் அரசுப் பணி வாய்ப்புப் பெற்றுத் தருவதற்கு பணம் அதிகம் செலவாகும் எனக் கூறியுள்ளார். அதற்கு சகோதரர்கள் 2 பேரும் சம்மதம் தெரிவித்தைத் தொடர்ந்து, சிந்துஜாவும், சத்தியமூர்த்தியும் சேர்ந்து பல தவணைகளாக ராஜேஷ்குமார் மற்றும் அவரது சகோதரரிடமிருந்து ரூ. 11 லட்சம் பணம் வசூலித்துள்ளனர்.