ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காட்டுமன்னார்கோயிலில் லாரி திருட்டு!

காட்டுமன்னார்கோயில் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜேந்திரன் (65). இவரது தம்பி ஊமைத்துரை பெயரில் TAF 0888 லாரி வாங்கி வாடைகைக்கு விட்டுள்ளார். இந்த லாரி தமிழ்நாடு

News image
Updated On :2 அக்டோபர் 2013, 12:22 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயிலில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த லாரியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

காட்டுமன்னார்கோயில் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜேந்திரன் (65). இவரது தம்பி ஊமைத்துரை பெயரில் TAF 0888 லாரி வாங்கி வாடைகைக்கு விட்டுள்ளார். இந்த லாரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பக் கழகத்திற்கு ரேஷன் அரிசி ஏற்றி கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது. லாரியை பழஞ்சநல்லூரைச் சேர்ந்த கண்ணன் என்ற டிரைவர் ஓட்டி வருகிறார். இந்நிலையில்  அக்.1-ம் தேதி லாரியை எடுத்துச் சென்ற டிரைவர் பணி ஏதுவும் இல்லை என பிற்பகல் ராஜேந்திரன் வீட்டு முன்பு சாலையோரம் நிறுத்திவிட்டு சாவியை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அக்.2-ம் தேதி அதிகாலை பார்க்கும் போது லாரியை காணவில்லை.

இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.