நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 என விலை நிர்ணயம் செய்ய உழவர் முன்னணி கோரிக்கை
கூட்டத்தில் விலைவாசி உயர்வு, கூலி உயர்வு, இடுபொருள்களின் விலை உயர்வு, நீர், மின் பற்றாக்குறையால் உற்பத்தி செலவு அதிகரித்திருக்கும் போது நெல் கொள்முதல் விலையை 50 காசுகள்


நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 என்று விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு, தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக உழவர் முன்னணி செயற்குழுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மாவட்டத் தலைவர் அ.கோ.சிவராமன் தலைமை வகித்தார். செயலாளர் சி.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கோ.வெங்கடாசலம், சிவபுரி பொன்னுசாமி, தங்க கென்னடி, மதிவாணன், துணைச் செயலாளர் பூலாமேடு ரா.சரவணன், சிவாயம் நாரயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விலைவாசி உயர்வு, கூலி உயர்வு, இடுபொருள்களின் விலை உயர்வு, நீர், மின் பற்றாக்குறையால் உற்பத்தி செலவு அதிகரித்திருக்கும் போது நெல் கொள்முதல் விலையை 50 காசுகள் மட்டும் முதல்வர் உயர்த்தியிருப்பது வேதனை அளிக்கிறது. எனவே நெல் குவிண்டால் ரூ.2500 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; கடந்த 2012-13 ஆண்டு வேளாண் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு செப்.2013 முடிந்தும் இதுநாள் வரை காப்பீட்டுத்தொகை அறிவிக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு 2012ல் அறிவித்து விட்டார்கள். 2 ஆண்டுகளா இயற்கை இடர்பாடால் விவசாயம் பொய்த்துபோன நிலையில் தற்போது கிடைத்துள்ள நீரைக் கொண்டு உழவுப்பணிகள் செய்ய இந்த காப்பீட்டுத்தொகை உதவியாக இருக்கும் என பயிர்காப்பீடு நிறுவனத்திடமிருந்து காப்பீடுத் தொகையை தமிழக முதல்வர் பெற்றுத்தர வேண்டும்; கடந்த 2012-13ம் ஆண்டு காப்பீட்டு பிரிமிய தொகையை தமிழகஅரசு செலுத்தியது போல், இந்த ஆண்டும் அரசே செலுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...