ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஆட்சி மன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களின் ஊழியர் கூட்டமைப்பின் கோரிக்கையை ஆதரித்து

News image
Updated On :3 அக்டோபர் 2013, 1:31 pm

ஜி.சுந்தரராஜன்

அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை பணிநேரம் முடிந்த பிறகு பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஆட்சி மன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களின் ஊழியர் கூட்டமைப்பின் கோரிக்கையை ஆதரித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பு தலைவர் சி.மதியழகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரா.உதயசந்திரன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ராஜேந்திரன், ஊழியர் சங்க துணைச் செயலாளர் துரை, நிர்வாகிகள் சுப்பிரமணியன், அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.