கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிக்சை பெற்ற கணவன்-மனைவி திடீர் தற்கொலை

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கணவன்-மனைவி ஆகியோர் புதன்கிழமை மாலை திடீரென தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :3 அக்டோபர் 2013, 7:48 am

ஜபலின் ஜான்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கணவன்-மனைவி ஆகியோர் புதன்கிழமை மாலை திடீரென தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரை சேர்ந்தவர் விவசாயி விஜயராஜ் (27). இவரது மனைவி கௌதமி (23). இத்தம்பதியினருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை.

 விஜயராஜுக்கு சில ஆண்டுகளாக இதய நோய் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சென்னை, வேலூர் நகரங்களில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இந்நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அடிக்கடி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தாராம்.

 இந்நிலையில், கடந்த சில நாள்களாக அவர் மீண்டும் சிகிச்சை பெற்று வந்தார். அவரது அறையில் விஜயராஜின் மனைவி கௌதமி, தாயார் ஆகியோர் உதவிக்காக இருந்தனர். புதன்கிழமை மாலை விஜயராஜும், கௌதமியும் அறையில் இருந்தனர். விஜயராஜின் தாயார் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தார்.

 நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர் செவிலியர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மருத்துவமனை  ஊழியர்கள் அறையின் பின்பக்கத்தில் உள்ள மற்றொரு கதவை திறந்து பார்த்தபோது அறையின் உள்ளே படுக்கையில் இருவரும் வாயில் நுரை தள்ளியபடி மயக்க நிலையில் இருந்தனர்.

 தகவல் அறிந்த மருத்துவர்கள் இருவருக்கும் முதலுதவி அளித்தும் பலனில்லை. சிறிது நேரத்தில் இருவரும் இறந்துவிட்டனர். தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.