ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரத்தில் தீவிபத்து: 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்

சிதம்பரம் வாகீசநகர் நேருவீதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரது வீட்டின் பின்புறம் கூரை வீடு உள்ளது. இந்த கூரை வீட்டை பன்னீர்செல்வம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். பன்னீர்செல்வம்

News image
Updated On :4 அக்டோபர் 2013, 1:35 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான திருமண அலங்கார பொருள்கள் எரிந்து சேதமுற்றன.

சிதம்பரம் வாகீசநகர் நேருவீதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரது வீட்டின் பின்புறம் கூரை வீடு உள்ளது. இந்த கூரை வீட்டை பன்னீர்செல்வம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். பன்னீர்செல்வம் திருமண நிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்கார பொருள்கள் அங்கு வைத்து குடோனாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அலங்கார பொருள்கள் வைத்துள்ள குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இத்தீவிபத்தில் குடோனிலிருந்து திருமண நிகழ்ச்சிக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்புள்ள அலங்கார பொருள்கள் எரிந்து சேதமுற்றன. தீவிபத்து குறித்து சிதம்பரம் நகர போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.