ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வடவாற்றில் அடித்து செல்லப்பட்டவரின் உடல் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள அரசக்குழியைச் சேர்ந்த வடிவேல்முருகன் (29). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிகிறார். இந்நிலையில்

News image
Updated On :4 அக்டோபர் 2013, 12:45 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வடவாற்றில் குளிக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள அரசக்குழியைச் சேர்ந்த வடிவேல்முருகன் (29). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிகிறார். இந்நிலையில் காட்டுமன்னார்கோயில் அருகே நாட்டார்மங்கலத்தில் உறவினர் வீட்டு துக்கநிகழ்ச்சிக்கு வியாழக்கிழமை வந்துள்ளார். பின்னர் வடிவேல்முருகன், உறவினர் பட்டுசாமியுடன் அருகே உள்ள வடவாற்றில் குளித்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் தீயணைப்பு மீட்புத்துறையினர் வடவாற்றில் அடித்தச் செல்லப்பட்ட வடிவேல்முருகன் தேடி வந்தனர். இந்நிலையில் ருத்ரசோலை மதகு அருகே வெள்ளிக்கிழமை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.