ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை துறைமுக அலுவகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

நாகை துறைமுகத்திலிருந்து தென்கிழக்கே 1,520 கீ.மீ தொலைவில், அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதையொட்டி,நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல்

News image
Updated On :8 அக்டோபர் 2013, 1:36 pm

சங்கர்

நாகை துறைமுக அலுவலகத்தில் தூர முன்னறிவிப்பாக1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

நாகை துறைமுகத்திலிருந்து தென்கிழக்கே 1,520 கீ.மீ தொலைவில், அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதையொட்டி,நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

புயல் உருவாகக் கூடிய திடீர்க் காற்றுடன் கூடிய மழை பெய்யும் வானிலைப்பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தூர முன்னறிவிப்பாக இந்த எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.நாகை மாவட்டம், மயிலாடுதுறை உள்ளிட்ட சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமைகாலை நேரத்தில் லேசான மழை பெய்தது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிற்பகல் நேரத்தில் லேசான மழை பெய்தது. மற்ற நேரங்களில் குறிப்பிடத்தக்க வானிலை மாற்றம் ஏதும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.