விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம்-நரையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலைராஜ் (40). இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும் மகன்களும் உண்டு. 11.9.2008 அன்று சோலைராஜ், ஊர் நாட்டாமை முனியாண்டியிடம் புரட்டாசி பொங்கல் வரி வசூல் தொடர்பாக பேசிக் கொண்டிருந்துள்ளார். கடந்த ஆண்டு வெளியூரில் இருந்து வந்து இங்கு குடியிருந்து வருபவர்களிடம் வரி வசூல் செய்யவில்லை என்றும், இந்த ஆண்டு அப்படி இல்லாமல் எல்லாரிடமும் பொங்கலுக்கு வரி வசூல் செய்ய வேண்டும் என்றும் சோலைராஜ் கூறியுள்ளார்.
அப்போது அருகில் இருந்த பொய்ப்புலி (எ) முனியாண்டி (35) என்பவர், சோலைராஜ் இவ்வாறு கூறியது தொடர்பாக தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் பொய்ப்புலி (எ) முனியாண்டி, சோலைராஜை வெட்டியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோலைராஜ் சிகிச்சை பலனின்றி 12.9.2008-ம் தேதி உயிரிழந்தார்.
மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பொய்புலி (எ) முனியாண்டியை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பி.எஸ்.ஆவடி தியாகராஜமூர்த்தி, பொய்புலி (எ) முனியாண்டிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

