தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் மற்றும் அகடமிக் கவுன்சில் உறுப்பினர்கள் நியமனம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்கலைக்கழக

News image
Updated On :11 அக்டோபர் 2013, 1:56 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் (ஆட்சிமன்றம்) மற்றும் அகடமிக் கவுன்சில் (கல்விக்குழு) உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. பின்னர் தமிழகஅரசால் ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழக நிர்வாகியாக கடந்த ஏப்.5-ம் தேதி நியமனம் செய்யப்பட்டு, அவர் உடனடியாக பொறுப்பேற்று நிதிநெருக்கடிகளை போக்க பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சட்டதிருத்த மசோதா மே.16-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றம் மற்றும் கல்விக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்சிமன்றம் மற்றும் நிதி கமிட்டி உறுப்பினர்கள் (Syndicate and Finance Committee Members): தலைவர்- நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் (Administrator), உறுப்பினர்கள்- முதன்மைச் செயலாளர், தமிழ்நாடுஅரசு நிதித்துறை (Principal Secretary to Government, Finance Department),  தமிழ்நாடுஅரசு தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் (Commissioner of Technical Education),  பல்கலைக்கழக அனைத்து புல முதல்வர்கள் (All Deans of Faculties), பதிவாளர் என்.பஞ்சநதம் (Registrar), பல்கலைக்கழக சிறப்பு செல் மற்றும் அரசு  துணைச் செயலாளர் (சட்டம்) (Deputy Secretary to Government (Law), Special Cell, Annamalai University), பல்கலைக்கழக நிதிஅதிகாரி (Finance Officer).

கல்விக்குழு உறுப்பினர்கள் (Acadamic Council Members): தலைவர்- நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் (Administrator), உறுப்பினர்கள்- தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் (Commissioner of Technical Education), அனைத்து புல முதல்வர்கள் (All Deans of Faculties), உறுப்பினர் செயலர்- பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம், உறுப்பினர்கள்- இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் பரதன் (Dr. Bharadhan, Professor and Head, Department of Physics); கட்டட பொறியியல் துறைத் தலைவர் முனைவர் முருகப்பன் (Dr. Murugappan, Professor and Head, Department of Civil Engineering); பல்கலைக்கழக உயிர் வேதியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர் நாகினி (Dr. Nagini, Professor and Head, Department of Bio-Chemistry & Bio-Technology); பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவர் முனைவர் நாகராஜன் (Dr. Nagarajan, Professor and Head, Department of Library & Information Science); வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஹெச்.சங்கர் (Dr. H. Sankar, Professor and Head, Department of Commerce).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.