தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது: சிதம்பரத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழக வாழ்வுரிமைகட்சி மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் தலைமை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில்

News image
Updated On :11 அக்டோபர் 2013, 11:21 am

ஜி.சுந்தரராஜன்

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது, உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தியாகு உயிரை காப்போம் என வலியுறுத்தி சிதம்பரம் வடக்கவீதி தலைமை அஞ்சலகம் முன்பு அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைகட்சி மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் தலைமை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, பாலஅறவாழி, தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொதுச் செயாளர் உ.கண்ணன், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் கு.பெருமாள், குமராட்சி ஒன்றியச் செயலாளர் பா.ராசாராமன், நாம் தமிழர்கட்சி கடலூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணப்பாளர் செ.புகழேந்தி, மக்கள் உரிமை கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சி.செ.பழமலை, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன், சுப்பிரமணியசிவா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.  தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.