மாமனாரை கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் அமலா ஞானவடிவுக்கும், சொக்கலிங்கபுரம் வடக்குத்தெருவைச் சேர்ந்த சுப்பையாவுக்கும் (33) கடந்த 5


தூத்துக்குடி அருகே மாமனாரை அடித்துக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் அமலா ஞானவடிவுக்கும், சொக்கலிங்கபுரம் வடக்குத்தெருவைச் சேர்ந்த சுப்பையாவுக்கும் (33) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது.தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமலா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தாராம். அப்போது, சுப்பையா அங்குச் சென்று தகராறு செய்ததாக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18.3.2011 அன்று இரவு ராமசாமி வீட்டுக்குச் சென்ற சுப்பையா தன்னுடன் வருமாறு அமலாவை அழைத்தாராம்.
அப்போது, ராமசாமி திட்டியதால் அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரை சுப்பையா தாக்கியதாகக் கூறப்படுகிறது, இதுகுறித்து ராமசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த புதுக்கோட்டை போலீஸார் சுப்பையாவை கைது செய்தனர்.இந்த வழக்கு தூத்துக்குடி இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பால்துரை குற்றம்சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...