நாகை அருகே கணவரைக் கொன்ற மனைவி கைது
நாகை மாவட்டம், திட்டச்சேரி காவல் சரகம், திருக்கண்ணபுரம் மேலபெருநாட்டார் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழ்வாணன்(35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிலம்பரசி(30). இவர்களுக்கு 2


நாகை மாவட்டம், திருமருகல் அருகே குடும்பத் தகராறில் கணவரைக் கொலை செய்து, தற்கொலையாக சித்தரித்த மனைவி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், திட்டச்சேரி காவல் சரகம், திருக்கண்ணபுரம் மேலபெருநாட்டார் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழ்வாணன்(35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிலம்பரசி(30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். கடந்த ஒரு மாத காலமாக தமிழ்வாணன் தனது குடும்பத்தினருடன், திருமருகல் அருகே உள்ள கணபதிபுரம் கன்னிகோவில் தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை தமிழ்வாணன் வீட்டில் புடவையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சிலம்பரசி அக்கம்பக்கத்தவரிடம் தெரிவித்து, அழுது புலம்பியுள்ளார்.
இது குறித்தத் தகவலின் பேரில், திட்டச்சேரி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், சார்பு ஆய்வாளர் விஜய் ஆகியோர் தமிழ்வாணனின் வீட்டுக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, சந்தேகத்தின் பேரில் சிலம்பரசியிடம் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில், வியாழக்கிழமை கணவர் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது சிலம்பரசி, தமிழ்வாணனை சுவற்றில் மோதி, புடவையால் தூக்கிட்டுத் தொங்கச் செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து தமிழ்வாணனின் தாய் முனியம்மாள் அளித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிலம்பரசியை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...