தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

விஷவண்டு கடித்து 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!

சிதம்பரம் அருகே சாலையோர மரத்திலிருந்த விஷவண்டு கடித்து உப்பு வியாபாரி உள்ளிட்ட 6 பேர் காயமுற்று சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

News image
Updated On :12 அக்டோபர் 2013, 9:40 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே சாலையோர மரத்திலிருந்த விஷவண்டு கடித்து உப்பு வியாபாரி உள்ளிட்ட 6 பேர் காயமுற்று சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ளது திட்டு ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமம். அங்கு சனிக்கிழமை காலை சிதம்பரத்திலிருந்து உப்பு வியாபாரி ராமசாமி வியாபாரத்திற்கு அங்கு சென்றுள்ளார். அப்போது சாலையோரம் புளியமரத்தில் இருந்த விஷவண்டுகள் அவரை தாக்கியது. காப்பாற்றுங்கள் என அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கிராமத்தில் அருகாமையில் இருந்த மணி, மகாதேவன், திருஞானம், எழிலரசன், மணிகண்டன் ஆகியோர் சென்று ராமசாமியை காப்பாற்றிய போது அவர்களையும் விஷவண்டுகள் தாக்கியது. இதில் காயமுற்ற 7 பேரும் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் ராமசாமி, மகாதேவன் உள்ளிட்ட் 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சாலையோரம் உள்ள மரத்தில் நீண்ட காலமாக உள்ள விஷவண்டுகள் அவ்வழியே செல்பவர்களை தொடர்ந்து கடித்து அச்சுறுத்தி வருவதால், விஷவண்டுகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.