எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வேலை வாங்கித் தருவதாக மோசடி: அரசு பள்ளி ஆசிரியை கணவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக திண்டுக்கல் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியையின் கணவரை ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது

Updated On :14 அக்டோபர் 2013, 1:08 pm

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக திண்டுக்கல் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியையின் கணவரை ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், ராசிங்காபுரத்தைச் சேர்ந்த முத்தையன் மகன் அழகர்ராஜா. இவர், பி.பார்மஸி படித்து விட்டு வேலை தேடி வந்தாரம். அழகர்ராஜாவுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக் கூறி ஆண்டிபட்டி, காமராஜர்நகரைச் சேர்ந்த திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அரசு பள்ளியில் ஆசிரியை புஷ்பராணி, அவரது கணவர் பிரசாத் ஆகியோர் பல்வேறு தவணைகளில் ரொக்கமாகவும், வங்கி காசோலையாகவும் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.

வேலை வாங்கித் தர காலதாமதம் ஏற்பட்டதால் பணத்தை திரும்ப தருமாறு கேட்டதற்கு, பிரசாத் அளித்த காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டதற்கு புஷ்பராணி, பிரசாத் ஆகியோர் முறையாக பதில் கூறாமலும், பணத்தை திரும்பத் தராமலும் மோசடி செய்ததாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் அழகர்ராஜா புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், புஷ்பராணி, பிரசாத் ஆகியோர் மீது காவல் ஆய்வாளர் நல்லு வழக்கு பதிந்து, பிரசாத்தை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.