தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திருக்கோவிலூர் அருகே தடையை மீறி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைபயணம்

வீரங்கிபுரம்,  கந்தாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் சாலை வசதி, சுகாதாரவசதி கழிவுநீர் வாய்க்கால்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று வலியுறுத்தி ஊர் பொது மக்கள், நேரு யுவகேந்திரா இளைஞர் நற்பணி மன்றம்,

News image
Updated On :15 அக்டோபர் 2013, 6:13 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் வட்டம் அருணாபுரம், ஒட்டம்பட்டு, வீரபாண்டி, கல்லந்தல். புதுப்பாளையம், வீரங்கிபுரம்,  கந்தாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் சாலை வசதி, சுகாதாரவசதி கழிவுநீர் வாய்க்கால்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று வலியுறுத்தி ஊர் பொது மக்கள், நேரு யுவகேந்திரா இளைஞர் நற்பணி மன்றம், மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் சார்பில் முதல் கட்ட நடைப் பயண போராட்டம் மேற்கொள்வது என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்ற 12 ம்தேதி திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த அமைதிக்குழு கூட்டத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் பங்கேற்கவேல்லை இதனால் அமைதிக்குழு கூட்டம் ரத்தானது.

இதையடுத்து திட்டமிட்டப்படி திருக்கோவில்லூர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலை முன்பு நடைப் பயணம் தொடங்க முன்வந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் மணம்பூண்டி 4 முனை சந்திப்பில் ஒன்று திரண்டு  நடைபயணத்தை தொடங்கினர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நடைப்பயணம் வேட்டவலம் வரை  சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.