விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, முத்தலாம்மன் 61-வது கலை விழா இம் மாதம் 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி (புதன்கிழமை) முடிய நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பில் சகல சமூகத்தினரும் சேர்ந்து ஒருமனதுடன் மழையை வேண்டி வழிபடுகின்ற கிராம தேவதையான முத்தாலம்மன் திருவிழா, பண்பட்ட கலை விழாவாக, கிராம மக்களின் ஒற்றுமையையும், மனப்பக்குவத்தையும், ஒழுக்கத்தையும் வளர்க்கும் உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருமைப்பாட்டு உணர்வுடன் ஒவ்வொரு ஆண்டும் முத்தாலம்மன் பக்த சபை சார்பில் கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு இம் மாதம் 9-ம் தேதி மாலை தமிழ்நாடு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. சாதி மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்தல் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆன்மீக கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சிறப்பு சொற்பொழிவுகள் முத்தாலம்மன் திடலில் நடைபெற்றது.
புதன்கிழமை காலை அம்மனுக்கு விசேஷ பூஜைகள், அலங்காரம் நடைபெற்று தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகளின் வழியே வந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்று அன்னதான அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

