டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேமுதிக, மதிமுகவுடன் கூட்டணி இல்லை: ராமதாஸ்

பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை சிறையில் குருவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.இந்தச் சந்திப்புக்குப் பிறகு

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:18 pm

அரவிந்தன்

மக்களவைத் தேர்தலில் தேமுதிக, மதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை சிறையில் குருவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.இந்தச் சந்திப்புக்குப் பிறகு ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:-

குரு ஆரோக்கியமாக உள்ளார். மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.தனித்தே போட்டியிடுவோம்.தேமுதிக, மதிமுகவுடனும் கூட்டணி அமைப்பதற்கும் வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நாங்கள் நடத்தவில்லை என்றார் அவர்.

மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ரவிராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.எலைட் கடைகளை மூட வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:-

எலைட் மதுக்கடைகளை வேறொரு பெயரில் தமிழக அரசு திறக்க முயற்சித்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். காந்தி பிறந்த நாளான அக்.2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்த கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூடக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எனவே மக்களின் உணர்வுகளை மதித்து மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். எலைட் கடைகளைத் திறந்து வணிக வளாகங்களை மது வளாகங்களாக மாற்றும் முடிவையும் அரசு கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.