ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சீர்காழி அருகே பெருமாள் கோவிலிலிருந்த சுவாமி சிலைகள் திருட்டு

நாகை மாவட்டம்,  சீர்காழி அருகே உள்ள கடவாசல் வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்த 4 உலோகச் சிலைகள் திருட்டுப் போனது வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரியவந்தது.

News image
Updated On :18 அக்டோபர் 2013, 5:41 pm

சங்கர்

நாகை மாவட்டம்,  சீர்காழி அருகே உள்ள கடவாசல் வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்த 4 உலோகச் சிலைகள் திருட்டுப் போனது வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரியவந்தது.

சீர்காழியை அடுத்த கடவாசலில் உள்ளது வரதாரஜப் பெருமாள் கோவில்.  இந்தக் கோவில், பூஜைகளுக்குப் பின்னர் வியாழக்கிழமை இரவு பூட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் அந்தக் கோவிலின் அர்ச்சகர் சத்தியநாதன், கோவிலுக்கு வந்த போது, கோவிலின் முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது, கோவிலினுள் இருந்த ஷ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், வரதராஜப் பெருமாள் சுவாமிகளின் (உத்சவ மூர்த்திகள்) உலோகச் சிலைகள் களவுப் போனது தெரியவந்தது. இந்தச் சிலைகள் சுமார் ஒன்றரை அடி முதல் 2 அடி உயரம் கொண்டவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.