தில்லை அம்மன் கோயிலில் புகைப் போக்கி விசிறிகளை பழுது நீக்க கோரிக்கை
சிதம்பரம் தில்லை அம்மன் கோயிலில் பழுதாகி செயல்படாமல் உள்ள புகைப் போக்கி விசிறிகளை பழுது நீக்க வேண்டும். தூய்மையான குடிநீர், மின்விளக்கு வசகி உள்ளிட்டவை செய்து தர வேண்டும் என தமிழக


சிதம்பரம் தில்லை அம்மன் கோயிலில் பழுதாகி செயல்படாமல் உள்ள புகைப் போக்கி விசிறிகளை பழுது நீக்க வேண்டும். தூய்மையான குடிநீர், மின்விளக்கு வசகி உள்ளிட்டவை செய்து தர வேண்டும் என தமிழக இளைஞர் முன்னணி சார்பில் கோயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாக செயல்அலுவலரை தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன், நிர்வாகிகள் பா.கா.கார்த்தி, வே.சுப்பிரமணியசிவா, செ.மணிமாறன், சு.சுகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். மனுவிபரம்: உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீநடராஜர் கோயில் அமைந்துள்ள சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ளது தில்லை அம்மன் கோயில். வரலாற்று பெருமை வாய்ந்த இக்கோயிலில் 4 வேளைகள் வழிபாடும், ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது. தினமும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கோயில் அமைப்புபடி காற்றோட்டம் இல்லாததால் வழிபாட்டின் போது கற்பூரத்திலிருந்து கரும் புகைகள் வெளியேற 10-க்கும் மேற்பட்ட இடங்களில் புகைபோக்கி விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. விசிறிகள் பழுதடைந்து செயல்பாடின்றி உள்ளதால் கோயிலுக்கு வரும் பொதுமக்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே புகைபோக்கி விசிறிகளை சீரமைத்து, பக்தர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தமிழக இளைஞர் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...