எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதிய வாக்காளர் சேர்க்கைக்கு அக்.31 இறுதி நாள்

தேனி மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பதிவு ஆகியவற்றுக்கு அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்று

Updated On :19 அக்டோபர் 2013, 2:17 pm

தேனி மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பதிவு ஆகியவற்றுக்கு அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

      தேனியில் தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் அவர் கூறியது: வரும் 2014, ஜன.1-ம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும்  வாக்காளர் திருத்தப் பதிவுக்கு சம்மந்தப்பட்ட நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வாக்குச் சாவடி நிலைய மையங்களில் அக்.31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். புதிய வாக்காளர் சேர்க்கைக்கு படிவம் எண்:6-ல், 2 கலர் புகைப்படங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்கம் செய்தவதற்கு படிவம் 7, திருத்தத்துக்கு படிவம் 8, ஒரே சட்டப் பேரவை தொகுதிக்குள் பாகம் விட்டு பாகம் மாற்றம் செய்யவதற்கு படிவம் 8 A மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

      வாக்காளர் சேர்க்கைக்கு 25 வயதுக்கு உள்பட்டவர்கள் இருப்பிட சான்று மற்றும் வயது சான்று நகல்களையும், 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பிட சான்றின் நகலையும் படிவத்துடன் இணைத்து சம்மந்தப்பட்ட அலுவலரிடம் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் சேர்க்கை மற்றும் திருத்தப் பதிவுகளுக்கு இரட்டை படிவத்தில் விண்ணப்பித்து ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

       மாவட்ட வருவாய் அலுவலர் சீ.சோமுபாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)பொன்னம்மாள், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நஜிமுன்னிஷா மற்றும் நகராட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.