தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

இடதுசாரிகள் உள்ளிட்ட மதவாத எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்: தொல்.திருமாவளவன்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் உள்ளிட்ட மதவாக எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

News image
Updated On :20 அக்டோபர் 2013, 8:58 am

ஜி.சுந்தரராஜன்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் உள்ளிட்ட மதவாக எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிதம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்ல் மதவாத சக்திகளுக்கும், மதசார்பற்றி சக்திகளுக்கும் இடையிலான ஒரு போராட்டமாக அமையவுள்ளது. ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதிரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. டிச.1-ம் தேதி வாழப்பாடியில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பது தொடருகிறது. மீனவர்களை காப்பாற்ற மத்தியஅரசு தொடர்ந்து மெத்தனம் காட்டும் என்றால், தமிழகஅரசு நேரடியாக தலையிட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஈழத்தமிழர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கு தமிழகஅரசும் போதிய நிதி உதவி அளிக்க வேண்டும். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமரோ அல்லது எந்த ஒரு பிரதிநிதியும் பங்கேற்க கூடாது. இதுகுறித்து பிரதமரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம். அப்படி பங்கேற்றால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

தமிழகம் எங்கும் தலித் மக்களுக்கு எதிராக அணி திரட்டிப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். அனைத்து சமுதாய பேரியக்கம் என்ற பெயரில் தலித் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது. இதனை தமிழகஅரசு வேடிக்கை பார்க்காமல், கூர்ந்து கண்காணித்து அச்சக்திகள் அணி திரளாமல் தடுத்திட வேண்டும். தமிழகத்தில் திட்டமிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. பெட்ரோல் குண்டு வீசி பேனர்கள் கொளுத்தப்படுகின்றன. சாதிய வாக்கு வங்கியை திரட்ட இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்கள் முன்பு சிதம்பரம் அருகே கருப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி கொடிக்கம்பங்களும் வெட்டி சாய்த்து கொடிகள் கொளுத்தப்பட்டுள்ளன. இதில் குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும், காவல்துறை விடுதலைச் சிறுத்தைகள் முகாம் பொறுப்பாளர் சிற்றரசுவை கைது செய்துள்ளது. இந்த போக்கை வண்மையாக கண்டிக்கிறோம். உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கைது செய்ய வேண்டும்.

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தை நகருக்கு வெளியே கட்டும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். நகரத்திலேயே அவர் அறக்கட்டளைக்காக வாங்கி கொடுத்துள்ள இடத்திலேயே மணி மண்டபம் அமைக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வழங்குவதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இது சமூகநீதிக்கு எதிரானது. அக்.24 முதல் 31-ம் தேதி வரை தமிழகம் தழுவிய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண் உரிமை கோரிக்கையை முன் வைத்து மண் உரிமை வாரத்தை கடைபிடிக்கவுள்ளது. தமிழக முழுவதும் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு உரிய மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு ஏதுவாக நீதியரசர் மருதமுத்து தலைமையிலான பஞ்சமி நில மீட்பு ஆணையத்தை செயல்படுத்த வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

பேட்டியின் போது கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன், கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பா.தாமரைச் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.