தேனியில் கல்விக் கடன் வழங்க ரூ.7,000 லஞ்சம் வாங்கியதாக செண்ட்ரல் வங்கி கிளை மேலாளரை வியாழக்கிழமை இரவு சி.பி.ஐ.,போலீஸôர் கைது செய்தனர்.
தேனி அருகே அரப்படித்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி(45). இவரது மகள் உதயராணி(18) பெங்களூருவில் பி.எஸ்.சி.,நர்சிங் படித்து வருகிறார். உதயராணிக்கு ரூ.2 லட்சம் கல்விக் கடன் வழங்கக் கோரி தேனியில் உள்ள செண்ட்ரல் வங்கியில் பாலுச்சாமி விண்ணப்பித்துள்ளார். கல்விக் கடன் வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று பாலுச்சாமியிடம் வங்கியின் கிளை மேலாளர் முத்துக்குமார்(45) கேட்டாராம். இது குறித்து தேனி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் பாலுச்சாமி புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க சென்னை சி.பி.ஐ.,போலீஸாருக்கு தேனி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர். சி.பி.ஐ.,போலீஸாரின் ஆலோசனைப்படி, வங்கி மேலாளார் முத்துக்குமாரை அவரது வீடு உள்ள ரத்னாநகர் பகுதியில் இரவு 10.50 மணிக்கு சந்தித்த பாலுச்சாமி, கல்விக் கடன் வழங்குவதற்கு லஞ்ச முன் பணமாக ரூ.7,000-ஐ முத்துக்குமாரிடம் கொடுத்தாராம். முத்துக்குமார் பணத்தை பெற்றுக் கொண்டதும், சி.பி.ஐ., காவல் ஆய்வாளர்கள் சரவணன், ரஞ்சித்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது பிசிசிஐயில் புகாரளித்த சிஎஸ்கே.!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்யும் முறை!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

