ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மனைவி எரித்துக் கொலை: கணவனுக்க ஆயுள் சிறை

மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :25 அக்டோபர் 2013, 5:21 pm

நாகராஜன்

மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வியாசர்பாடி தேசிகானந்தபுரத்தைச் சேர்ந்தவர் பி.பெருமாள் (49). இவரது மனைவி மீனா (37). இவர்களுக்கு தீபக், அஜீத் என்ற இரு மகன்கள் உள்ளனர். மீனா ஜெயின் பார்க் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். பெருமாள் தினமும் குடித்துவிட்டு மீனாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி மீனா வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது, ஞாயிற்றுக்கிழமை விடுமுரை. நீ எங்கே சென்று வந்தாய் என்று சந்தேகப்பட்டு கேள்வி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பெருமாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து மீனா மீது ஊற்றியுள்ளார். அப்போது, முடிந்தால் என் மீது தீவைத்துப் பார் என  மீனா கூறியதும் அவர் மீது பெருமாள் தீ வைத்தார்.

இதில், உடலில் பற்றிய தீயுடன் வீட்டை விட்டு மீனா வெளியே ஓடிவந்துள்ளார். இதைப் பார்த்த அவரது மகன்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மீனாவை அனுமதித்தனர். ஜனவரி மாதம் 24-ஆம் தேதி மருத்துவமனையில் மீனா இறந்தார்.

 வியாசர்பாடி போலீஸார் பெருமாள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மீனாசதீஷ் முன்பு விசாரணை நடந்தது. விசாரணையில் பெருமாள் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நீருபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.