ஆரணி வாக்குச்சாவடியில் திமுக-அதிமுகவினர் மோதல்:

ஆரணி கொசப்பாளையம், பெரியஜெயின் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர்களை சேர்க்கையில் திமுக-அதிமுகவினரிடையே
Updated on
1 min read

ஆரணி கொசப்பாளையம், பெரியஜெயின் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர்களை சேர்க்கையில் திமுக-அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

 ஆரணி கொசப்பாளையம், பெரியஜெயின் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுகவினர் சிலரின் பெயர்களை வாக்காளர் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். அப்போது திமுக சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் மற்றும் கவுன்சிலர் பச்சையப்பன், மாவட்டபிரதிநிதி ஏ.சி.மணி உள்ளிட்டோர் அங்கு சென்று வாக்காளர் சேர்க்கையை தடுத்தனர்.

 இதனால் அங்கிருந்த அதிமுகவைச் சேர்ந்த நகரசெயலர் அசோக்குமார், மாவட்டமகளிரணி செயலர் குமுதவள்ளி, முன்னாள் கவுன்சிலர் ஆனந்தன், நகர நிர்வாகி எஸ்.ரவீந்திரநாத் ஆகியோர் திமுகவினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

 அப்போது செய்தியாளர்களிடம் திமுக சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் கூறியது, அதிமுகவினர் படிவம் எண் 6 என்ற வாக்காளர் சேர்க்கை படிவத்தினை அதிமுகவினர் கட்சி கலரில் முதல்வரின் படத்துடன் அச்சிட்டு அதில் வாக்காளர்களிó பெயர்களை எழுதி வாக்குச்சாவடியில் பதிவு செய்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. வாக்காளர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். அதிமுகவினர் போலியான வாக்காளர்களை சேர்ப்பதாக அறிகிறோம்.

 இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்ப உள்ளேன். புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும். இதனை தடுக்க சென்ற எங்களை அதிமுகவினர் மிரட்டுகின்றனர் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com