47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இலங்கை மாநாட்டுக்குச் செல்வதா?: ஆவேசத்தில் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி தீக்குளிப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்லப் போவதாகக் கூறியதை அடுத்து, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியாவின் சார்பில் யாரும் காமன்வெல்த்

News image
Updated On :28 அக்டோபர் 2013, 7:42 am

ரவி

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்லப் போவதாகக் கூறியதை அடுத்து, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியாவின் சார்பில் யாரும் காமன்வெல்த் மாநாட்டின் கலந்துகொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி விவசாயி ஒருவர் இன்று திடீரென தீக்குளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி, ஜெயபால் (43), இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அப்போது அவர், இலங்கைக்கு இந்தியாவின் சார்பில் யாரும் செல்லக் கூடாது என்றும், கிருஷ்ணகிரி கேஆர் அணையில் இருந்து திண்டல் வழியாக வரும் பாசனக் கால்வாயினை அரூர் வரை நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்தார்.

பணியில் இருந்த போலீஸார், அவரைத்தடுத்து உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.