கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஈரோடு பொறியியல் கல்லூரி அருகே ஓடையில் பைப் வெடிகுண்டுகள் மீட்பு: போலீஸார் அதிர்ச்சி

ஈரோடு - திண்டல் தனியார் பொறியியல் கல்லூரி அருகே வெடிக்கப்படாத நிலையில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2013, 7:35 am

ஜபலின் ஜான்

ஈரோடு - திண்டல் தனியார் பொறியியல் கல்லூரி அருகே வெடிக்கப்படாத நிலையில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி அருகே உள்ள ஓடையில் இரண்டு பைப் வெடிகுண்டுகள், வெடிக்கப் படாத நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குண்டுகளில் ஒயர்கள் சுற்றப்பட்டு, வெடிக்கச் செய்வதற்கான முயற்சியுடன் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. எஸ்பி பொன்னி தலைமையில் 30 போலீஸார் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குண்டுகள் இந்தப் பகுதியில் வைப்பதற்காக செய்யப்படவில்லை என்றும், அவற்றை வேறு எங்கோ பயன்படுத்த எடுத்துச் சென்று, அவற்றைப் பயன்படுத்த முடியாததால் ஓடையில் வீசிச் சென்றிருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுகிறது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.