ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

2 வீடுகளின் பூட்டை உடைத்து 21 பவுன், ரூ.84 ஆயிரம் ரொக்கம் திருட்டு

திருவண்ணாமலை, வேங்கிக்கால், மண்ணுப்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி (45). பழ வியாபாரி. இவர், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச்

News image
Updated On :29 அக்டோபர் 2013, 3:17 pm

சரவண பெருமாள்

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 21 பவுன் தங்க நகைகள், ரூ.84 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை, வேங்கிக்கால், மண்ணுப்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி (45). பழ வியாபாரி. இவர், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார். செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் ரொக்கம், 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது கண்டு திடுக்கிட்டார்.

மற்றொரு திருட்டு:

இதேபோல, திருவண்ணாமலை, வேங்கிக்கால், வானவில் நகரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் வீட்டிலும் மர்ம நபர்கள் திங்கள்கிழமை இரவு புகுந்து 8 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.

இவ்விரு திருட்டு சம்பவங்கள் குறித்தும் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே இரவில் ஒரே பகுதியில் 2 வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது அப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.