ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குத்தாலம் அருகே கணவன் மனைவி வெட்டிக் கொலை: வட்டித் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை காரணம்?

நாகை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரம் கம்பர் தெருவில் வசித்தவர் மணி என்பவரின் மகன் சிவகுமார்(28). இவரது மனைவி ரேகா (21).

News image
Updated On :29 அக்டோபர் 2013, 3:35 am

சங்கர்

நாகை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரம் கம்பர் தெருவில் வசித்தவர் மணி என்பவரின் மகன் சிவகுமார்(28). இவரது மனைவி ரேகா (21).

சிவகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். கடந்த 3 மாதங்களாக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர், இங்கே வட்டிக்கு பணம் தரும் தொழிலைச் செய்து வந்தார்.

இந்திலையில் செவ்வாய்க் கிழமை இன்று அதிகாலை 3 மணி அளவில் சிவகுமார் வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல், சிவகுமார், அவரது மனைவி ரேகா இருவரையும் அரிவாளால் வெட்டியது. இதில், இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீஸார், உடல்களைக் கைப்பற்றி, கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். வட்டித் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.