கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேளாங்கண்ணியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் 110 பேருக்கு வாந்தி மயக்கம்

வேளாங்கண்ணியில் மாதா கோயில் திருவிழாவினை ஒட்டி பாதுகாப்புப் பணியில்  ஈடுபட்டிருந்த போலீஸார் 110 பேர் உள்பட சுமார் 150 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாயினர்.

News image
Updated On :1 செப்டம்பர் 2013, 7:53 am

சங்கர்

வேளாங்கண்ணியில் மாதா கோயில் திருவிழாவினை ஒட்டி பாதுகாப்புப் பணியில்  ஈடுபட்டிருந்த போலீஸார் 110 பேர் உள்பட சுமார் 150 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாயினர்.

சர்ச்சு திருவிழாவுக்கு பாதுகாப்புப் பணிக்காக வந்த காவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அருகில் உள்ள, சர்ச்சுக்கு உட்பட்ட பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நேற்று இரவு உணவு வழங்கப்பட்டிருந்தது. இந்த உணவினை உண்ட போலீஸார் 110 பேரும், அதிகாரிகள் சுமார் 40 பேரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.