வரும் அக்டோபர் 5-ம் தேதி சென்னையில் கோரிக்கை மாநாடு நடத்துவது என்று சேலத்தில் நடைபெற்ற ஆவின் ஊழியர் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் கூட்டம் சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க நிர்வாகி என்.சலீம் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலர் எல்.சுந்தரராஜன், கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநிலச் செயலர் ஆ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ஆவின் ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சீரான விடுப்பு சலுகை வழங்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை (2012) அமல்படுத்த வேண்டும். ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கும் முறையைக் கைவிட்டு நேரடியாக ஊழியர்களை நியமித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அக்டோபர் 5-ம் தேதி கோரிக்கை மாநாடு நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
ஆவின் ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் சி.மயில்வேலன், எஸ்.வேலுசாமி, இ.மணிவேல், பி.கே.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

