அவிநாசி அருகே தெக்கலூரில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இன்று சம்பவயிடத்திலே இரு இளைஞர்கள் உயரிழந்தனர்.
கூடலூர் நியூஹோப் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் டியூக்ரவி மகன் டேனியல் ஜோஸ்வர(26), தற்போது கோவை, போத்தனூர் டிச்சர் காலனியில் குடியிருந்து வருகிறார். இவரது நன்பர் கோவை, செல்வபுரம் தி்ல்லைநகரைச் சேர்ந்த ரமதுல்லா மகன் அப்துல் நாசர்(27). இவர்கள் இருவரும் திருப்பூர் பனியன் தொழிலாளார்கள். இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி இருவரும் இருசக்கர வாகனத்தில் அவிநாசி வழியாக வந்து கொண்டிருந்தனர். தெக்கலூரி புறவழிச்சாலை மேம்பாலம் அருகே வரும் போது, ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த டேனியல் ஜோஸ்வா, அப்துல் நாசர் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு

பாஜகவை வீழ்த்துவதுதான் குறிக்கோள்! இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் சிறப்பு நோ்காணல்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

