அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ரேசன் அரிசி கடத்தி மாவாக்கி விற்பனை: 4 பேர் கைது

தனக்கன்குளம் நேதாஜி நகரில் ஒரு ஆலையில் ரேசன் அரிசியை கடத்தி அதனை மாவாக்கி அப்பள நிறுவனங்கள் மற்றும் முறுக்கு செய்பவர்களுக்கு விற்பனை செய்வதாக மதுரை குடிமைப்பொருள் வழங்கல்

News image
Updated On :13 செப்டம்பர் 2013, 12:57 pm

மது

திருநகரை அடுத்த தனக்கன்குளத்தில் ரேசன் அரிசியை கடத்தி மாவாக்கி விற்பனை செய்பவர்கள் 4 பேர்களை போலீஸார் இன்று கைது செய்தனர்.

தனக்கன்குளம் நேதாஜி நகரில் ஒரு ஆலையில் ரேசன் அரிசியை கடத்தி அதனை மாவாக்கி அப்பள நிறுவனங்கள் மற்றும் முறுக்கு செய்பவர்களுக்கு விற்பனை செய்வதாக மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலணாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமை யில் போலீஸார் மாவு ஆலையை சுற்றிவளைத்து அங்கிருந்த 4 பேர்களை கைது செய்தனர்.இதில் ஆலையின் உரிமையாளர் சோலையழகுபுரத்தை சேர்ந்த நளபாலன் (37),செல்வராஜ்(32),மதுரை சம்பட்டிபுரத்தை சேர்ந்த முருகன்(35)மற்றும் பாண்டி(37) ஆகியோர்களை கைது செய்தனர்.சம்பவ இடத்திற்கு மாவட்ட வழங்கல் அதிகாரி லதா, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.பி சுவாமிநாதன் ஆகியோர் வந்து விசாரணை செய்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்: இவர்கள் திருநகர், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பச்சரிசி மூட்டைகளை வாங்கி அதனை இங்குள்ள மாவு ஆலையில் குருணை நிலையில் அரைத்து மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள மற்றொரு ஆலையில் பச்சரிசி மாவாக்கி மதுரை மற்றும் வெளியூர்களில் உள்ள அப்பளம் மற்றும் முறுக்கு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சப்ளை செய்கின்றனர்.இங்கு தற்போது 140 மூட்டை பச்சரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.அதில் 104 மூட்டை அரிசியாகவும்,மீதமுள்ளவை மாவு மூட்டைகளாகவும் கைப்பற்றியுள்ளோம். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேன்,மாவரைக்கும் இயந்திரம் ஆகியவற் றையும் கைப்பற்றியுள்ளோம் என்றனர். மேலும் சம்பந்தப்பட்ட ரேசன் கடை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நளபாலன் ஏற்கனவே இதே வழக்கில் கைது செய்யப்பட்டவர் எனவும்,பாண்டி ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் குண்டாஸ் தண்டனை பெற்றவர் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.