சிதம்பரம் பல்கலை. ருவாண்டோ மாணவி பாலியல் பலாத்காரம்: சக மாணவர் கைது
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ருவாண்டோ நாட்டு மாணவி ஒருவர் சக மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ருவாண்டோ நாட்டு மாணவி ஒருவர் சக மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் சகமாணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ருவாண்டோ நாட்டைச் சேர்ந்த மாணவி இராகோஸ் ஒலுரிசி (21). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி எம்ஏ ரூரல் டெவலப்மெண்ட் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் சனிக்கிழமை மாலை முத்தையாநகரில் வசிக்கும் தனது நண்பரை பார்க்க ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ளவர் பக்கத்து வீட்டை காட்டியுள்ளார். பக்கத்து வீட்டிற்கு சென்ற மாணவியை அங்கிருந்த ருவாண்டோ நாட்டைச் சேர்ந்த எம்எஸ் இன்பர்மேஷன் டெக்னாலஜி 2-ம் ஆண்டு மாணவர் ஷிமோயாஸ்ஹேமா புரூஸ்ஆலிவர் (22) என்பவர் மேற்கண்ட பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் உடலில் காயமுற்ற மாணவி இராகோஸ் ஒலுரிசி பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து (Cr no: 275/13U/S 376 ipc. 14-9-2013) மாணவர் ஷிமோயாஸ்ஹேமா புரூஸ் ஆலிவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...