சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

10வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல்

சோழவரம் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் வீரய்யாவின் மகள் சுசீலா(10).( பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறுமி சுசீலாவை சனிக்கிழமை மர்ம நபர்கள் சிலர் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம்

News image
Updated On :16 செப்டம்பர் 2013, 10:16 am

ம.சுந்​த​ர​மூ​ர்த்தி

சோழவரம் அருகே 10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். 

சோழவரம் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் வீரய்யாவின் மகள் சுசீலா(10).( பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறுமி சுசீலாவை சனிக்கிழமை மர்ம நபர்கள் சிலர் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தற்போது சுசீலா சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியல் செய்தனர். சாலை மறியல் செய்தவர்களிடம் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.