தூத்துக்குடி அருகே வியாபாரி வெட்டிக் கொலை: 4 பேருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வியாபாரியை புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்றனர்.


தூத்துக்குடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வியாபாரியை புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்றனர். மேலும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளையும் வெட்டிக் கொல்ல முயன்றனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செம்புலிங்கம் (45). அந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது தந்தை மகாலிங்கம் தனக்குச் சொந்தமான 1.36 ஏக்கர் நிலத்தை அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் அல்பர்ட்டிம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விற்று உள்ளார்.
அந்த இடத்தில் 20 சென்ட் நிலம் தனது பெயருக்கு உள்ளதாகக் கூறி செம்புலிங்கம் அதற்கான ஆவணங்களை அல்பர்ட்டிடம் காட்டினாராம். இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செம்புலிங்கம் தனக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் இடத்தில் சிறிய குடிசை அமைத்து அதில் தங்கி இருந்தாராம்.
குடிசையை காலி செய்யுமாறு அல்பர்ட் தொடர்ந்து கூறி வந்த நிலையில் இதுதொடர்பாக முத்தையபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கம்போல செம்புலிங்கம் தனது குடிசையையில் தனியாக புதன்கிழமை இரவு தங்கியிருந்தாராம்.
அப்போது, அங்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் 7 பேர் திடீரென செம்புலிங்கத்தை அறிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
மேலும், செம்புலிங்கத்தின் குடிசை வீட்டை அவர்கள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், செம்புலிங்கத்தின் வீட்டுக்குச் சென்ற அவர்கள் அவரது மனைவி பத்மா(43), மகன் ராஜலிங்கம்(24) மகள்கள் சிவசக்தி(20), மணிமேகலை(18) ஆகிய நால்வரையும் அரிவாளால் வெட்டினராம்.
அவர்கள் கூச்சலிட்டதால் அடையாளம் தெரியாத நபர்கள் 7 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். காயமைடந்த நால்வரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்து தகராறு தொடர்பாக மளிகைக்கடை வியாபாரி அல்பர் மற்றும் அவரது மகன்கள் உறவினர்கள் சிலர் சேர்ந்து செம்புலிங்கத்தை கொலை செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிவ வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த கொலை மற்றம் நான்குபேரை கொலை செய்ய முயன்றது தொடர்பாக 10 பிரிவில் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...